சித்ராவின் வலியை உணர முடிகிறது: குஷ்பு

சித்ராவின் வலியை உணர முடிகிறது: குஷ்பு
Updated on
1 min read

சித்ராவின் வலியை உணர முடிகிறது என்று நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் சித்ரா. இந்த சீரியல் மிகவும் பிரபலம் என்பதால், பலரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' முல்லை என்றே அவரை அழைத்து வந்தனர். இவருக்கென்று சமூக வலைதளத்தில் தனி ரசிகர் வட்டம் இருக்கிறது.

இன்று (டிசம்பர் 9) அதிகாலை சென்னை, பூந்தமல்லி அருகே உள்ள நசரத்பேட்டையில் இருக்கும் தனியார் ஹோட்டலில் சித்ரா தற்கொலை செய்துகொண்டார். இது சின்னத்திரை உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சித்ரா மறைவு தொடர்பாக குஷ்பு தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"உற்சாகம் நிரம்பி வழிந்த ஒரு உயிர் சீக்கிரம் மாய்த்துக் கொள்ளப்பட்டால், எது அவர்களை இப்படி ஒரு முடிவுக்குத் தள்ளியிருக்கும்? அவர் எவரிடமாவது பேசியிருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். சித்ராவைத் தனிப்பட்ட முறையில் எனக்குத் தெரியாது. ஆனால், என்னால் வலியை உணர முடிகிறது. நீங்கள் தேடிய அமைதி உங்களுக்குக் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன் சித்ரா".

இவ்வாறு குஷ்பு தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in