பல பெண்களுக்கு நீங்கள் ஊக்கமாக இருந்தீர்கள்: சித்ரா மறைவுக்கு 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' குமரன் இரங்கல்

பல பெண்களுக்கு நீங்கள் ஊக்கமாக இருந்தீர்கள்: சித்ரா மறைவுக்கு 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' குமரன் இரங்கல்
Updated on
1 min read

சின்னத்திரை நடிகை சித்ரா மறைவுக்கு 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் நடித்துவரும் குமரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் சித்ரா. இந்த சீரியல் மிகவும் பிரபலம் என்பதால், பலரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' முல்லை என்றே அழைத்து வந்தனர். இவருக்கென்று சமூக வலைதளத்தில் தனி ரசிகர் வட்டம் இருக்கிறது.

இன்று (டிசம்பர் 9) அதிகாலை சென்னை, பூந்தமல்லி அருகே உள்ள நசரத்பேட்டையில் இருக்கும் தனியார் ஹோட்டலில் சித்ரா தற்கொலை செய்து கொண்டார். இது சின்னத்திரை உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சித்ரா தற்கொலை குறித்து, 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் அவருக்குக் கணவராக கதிர் கதாபாத்திரத்தில் நடித்துவரும் குமரன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பிரிவில் கூறியிருப்பதாவது:

"நீங்கள் உங்கள் துணிச்சலால் அறியப்பட்டவர். பல பெண்களுக்கு நீங்கள் ஊக்கமாக இருந்துள்ளீர்கள். நீங்கள் திருப்பிச் சண்டையிட்டிருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இது ஒரு பதில் இல்லை. இனிமேலும் இருக்காது".

இவ்வாறு குமரன் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in