Published : 01 Nov 2020 06:51 PM
Last Updated : 01 Nov 2020 06:51 PM

கேபிள் சங்கர் இயக்கத்தில் அபி ஹாசன்

சென்னை

கேபிள் சங்கர் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் அபிஹாசன் நாயகனாக நடிக்கவுள்ளார்.

தமிழ்த் திரையுலகில் பல வரவேற்பு பெற்ற படங்களைத் தயாரித்தவர் சி.வி.குமார். மேலும், இயக்குநராகவும் 2 படங்கள் இயக்கியுள்ளார். தற்போது '4ஜி', 'டைட்டானிக்: காதலும் கவுந்து போகும்' ஆகிய படங்களைத் தயாரித்து வருகிறார். மேலும், சில பெயரிடப்படாத படங்களை தயாரித்து வருபவர், தன்னுடைய இயக்கத்தில் அடுத்து உருவாகும் படத்தை சில தினங்களுக்கு முன்பு அறிவித்தார்.

இந்நிலையில், தனது தயாரிப்பில் உருவாகும் புதிய படமொன்றை அறிவித்துள்ளார் சி.வி.குமார். இந்தப் படத்தை பிரபல எழுத்தாளர் கேபிள் சங்கர் இயக்கவுள்ளார். 'தொட்டால் தொடரும்' என்ற படத்தைத் தொடர்ந்து கேபிள் சங்கர் இயக்கத்தில் உருவாகும் படம் இது.

இதில் நாயகனாக நாசரின் மகன் அபி ஹாசன் நடிக்கவுள்ளார். கமல் தயாரிப்பில் விக்ரம் நடித்திருந்த 'கடாரம் கொண்டான்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அபி ஹாசன் நடித்திருந்தது நினைவு கூரத்தக்கது. தற்போது அபி ஹாசனுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x