'அந்தகாரம்' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

'அந்தகாரம்' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
Updated on
1 min read

நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் 'அந்தகாரம்' படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

'பிகில்' படத்துக்குப் பிறகு ஷாரூக்கான் நடிக்கவுள்ள படத்தை இயக்கவுள்ளார் அட்லி. தற்போது அதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையே, பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து 'அந்தகாரம்' என்ற படத்தைத் தயாரித்துள்ளார் அட்லி.

இந்தப் படத்தின் பணிகள் முடிந்து வெளியீட்டுக்குத் தயாரானபோது கரோனா அச்சுறுத்தல் தொடங்கியது. இதனால், ஓடிடி வெளியீட்டுக்கான பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வந்தது. நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் உறுதியானாலும், படம் எப்போது வெளியாகும் என்பதே தெரியாமல் இருந்தது.

இறுதியாக, நவம்பர் 14-ம் தேதி வெளியாகும் என நெட்ஃப்ளிக்ஸ் தளம் அறிவித்துள்ளது. இதனைப் படக்குழுவினரும் தங்களுடைய சமூக வலைதளத்தில் உறுதி செய்துள்ளனர். விக்னாராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் அர்ஜுன் தாஸ், வினோத் கிஷன், பூஜா ராமசந்திரன், மிஷா கோஷல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in