ஆறாது சினம் பெயரில் ரீமேக் ஆகிறது மெமரீஸ்

ஆறாது சினம் பெயரில் ரீமேக் ஆகிறது மெமரீஸ்
Updated on
1 min read

தமிழில் அறிவழகன் - அருள்நிதி இணைப்பில் ரீமேக்காகி வரும் 'மெமரீஸ்' ரீமேக்கிற்கு 'ஆறாது சினம்' என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள்.

'ஈரம்', 'வல்லினம்' போன்ற வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்ட படங்களை இயக்கியவர் இயக்குநர் அறிவழகன்.

தற்போது அறிவழகன் இயக்கும் இப்படம் மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'மெமரீஸ்' படத்தின் ரீமேக்காகும். ப்ருத்வி ராஜ் நடித்திருந்த இப்படத்தை ஜீத்து ஜோசப் இயக்கி இருந்தார். தற்போது இப்படத்துக்கு 'ஆறாது சினம்' என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள்.

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் அருள்நிதி, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in