சிம்பு - சுசீந்திரன் படத்தில் நந்திதா 

சிம்பு - சுசீந்திரன் படத்தில் நந்திதா 
Updated on
1 min read

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படத்தில் நந்திதா ஸ்வேதா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படத்தின் ஷூட்டிங் திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள பகுதிகளில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை மாதவ் மீடியா நிறுவனம் தயாரித்து வருகிறது.

ஒரே கட்டமாக ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு தீவிரமாகப் பணிபுரிந்து வருகிறது. இதில் நாயகியாக நிதி அகர்வால் நடித்து வருகிறார். தற்போது மற்றொரு நாயகியாக முக்கியக் கதாபாத்திரத்தில் நந்திதா ஸ்வேதா நடித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், படக்குழு இதை இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக திரு, இசையமைப்பாளராக எஸ்.எஸ்.தமன், எடிட்டராக ஆண்டனி, தயாரிப்பு வடிவமைப்பாளராக ராஜீவன், பாடலாசிரியராக யுகபாரதி ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in