கரோனாவில் இருந்து எஸ்பிபி குணமடைந்தாரா?- பரிசோதனையில் நெகட்டிவ் செய்தி தவறானது: எஸ்பிபி சரண் தகவல்

கரோனாவில் இருந்து எஸ்பிபி குணமடைந்தாரா?- பரிசோதனையில் நெகட்டிவ் செய்தி தவறானது: எஸ்பிபி சரண் தகவல்

Published on

பரிசோதனையில் எஸ்பிபிக்கு கரோனா தொற்று இல்லை என்று வெளியான தகவலில் உண்மையில்லை என அவரது மகன் எஸ்பிபி சரண் தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 5-ம் தேதி பிரபல பாடகர் எஸ்பிபிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடல்நிலை ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது.

எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தினமும் அவருடைய உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு வருகிறது. எஸ்.பி.பி.யின் மகன் சரணும் எஸ்.பி.பி.யின் உடல்நிலை பற்றிய தகவல்களை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் தனது தந்தையின் உடல்நலம் குறித்து எஸ்.பி.சரண் கூறியதாக, அவரின் செய்தித் தொடர்பாளர் நிகில் அறிக்கை வெளியிட்டிருந்தார், அதில், கரோனா பரிசோதனையில் அப்பாவுக்கு நெகட்டிவ் என்று வந்துள்ளதாக எஸ்பிபி சரண் தெரிவித்திருந்தார்.

இத்தகவல் அனைத்து ஊடகங்களிலும் வெளியானது. எனினும் இத்தகவலில் உண்மையில்லை என்று மீண்டும் எஸ்பிபி சரண் வீடியோ வெளியிட்டு, விளக்கம் அளித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in