ஐஸ்வர்யா ராஜேஷின் 25-வது படம்: டைட்டில் லுக் வெளியீடு

ஐஸ்வர்யா ராஜேஷின் 25-வது படம்: டைட்டில் லுக் வெளியீடு
Updated on
1 min read

ஐஸ்வர்யா ராஜேஷின் 25-வது படத்துக்குப் பெயரிடப்பட்டு, டைட்டில் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது.

'இது வேதாளம் சொல்லும் கதை' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆகிறார் ரதீந்திரன் ஆர்.பிரசாத். அஸ்வின், அபய் தியோல், ஐஸ்வர்யா ராஜேஷ், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை.

இந்நிலையில், தனது அடுத்த படத்துக்குத் தயாரானார் ரதீந்திரன். அந்தப் படத்தின் கதை ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் மிகவும் பிடித்துவிடவே, கார்த்திக் சுப்புராஜிடம் தெரிவித்தார். அவருக்கும் கதை பிடிக்கவே, பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளார்.

முழுக்க மலைப் பகுதிகளில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்தப் படத்துக்கு 'பூமிகா' எனத் தலைப்பிடப்பட்டு, படத்தின் டைட்டில் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. இதனை சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகும் 25-வது படமாக 'பூமிகா' உருவாகியுள்ளது. ஒளிப்பதிவாளராக ராபர்ட், இசையமைப்பாளராக ப்ரித்வி சந்திரசேகர், எடிட்டராக ஆனந்த் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in