அப்பாவின் உடல் நிலை சீராக உள்ளது; சிக்கல்கள் இல்லை: எஸ்.பி.சரண்

அப்பாவின் உடல் நிலை சீராக உள்ளது; சிக்கல்கள் இல்லை: எஸ்.பி.சரண்
Updated on
1 min read

அப்பாவின் உடல் நிலை தீவிர சிகிச்சையில் சீராக உள்ளது; சிக்கல்கள் இல்லை என்று மகன் எஸ்.பி.சரண் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 5-ம் தேதி பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடம்பு ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது.

எஸ்.பி.பிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தினமும் அவருடைய உடல்நிலை குறித்து மகன் எஸ்.பி.சரண் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வரிசையில் இன்று (ஆகஸ்ட் 17) எஸ்.பி.சரண் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் பேசியிருப்பதாவது:

"அப்பா நேற்று எந்த நிலையில் இருந்தாரோ அப்படித்தான் இருக்கிறார். தீவிர சிகிச்சையில் இருந்தாலும் சீராக இருக்கிறார். வேறெந்த சிக்கல்களும் இல்லை. இது நல்ல அறிகுறி என்று மருத்துவர்கள் நினைக்கின்றனர். பிரார்த்தனைகள், வாழ்த்துகள், அக்கறை, அன்பு செலுத்தும் உங்கள் அனைவருக்கும் மீண்டும் நன்றி கூற விரும்புகிறேன். கண்டிப்பாக அப்பா மீண்டு வருவார். நன்றி"

இவ்வாறு எஸ்.பி.சரண் தெரிவித்துள்ளார்.

#Spb heathupdate 17/8/2020

A post shared by S. P. Charan/Producer/Director (@spbcharan) on

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in