நதியா போல யாஷிகா! - சன் டிவி 'ரோஜா' சீரியலின் புதுமை

நதியா போல யாஷிகா! - சன் டிவி 'ரோஜா' சீரியலின் புதுமை
Updated on
1 min read

வடிவுக்கரசி, காயத்ரி உள்ளிட்டோர் நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் சன் டிவி 'ரோஜா' தொடரில் சில அத்தியாயங்கள் மட்டுமே அவதரிக்கும் சிறப்புத் தோற்றத்தில் யாஷிகா ஆனந்த் நடிக்க உள்ளார். இவர் தமிழில் வெளியான 'இருட்டு அறையில் முரட்டு குத்து' உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர்.

கரோனா வைரஸ் பாதிப்பால் சின்னத்திரை படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த சூழலில் ஊரடங்கு முடிந்து மீண்டும் புதிய சீரியல்கள் வரும்போது அதில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர சேனல் தரப்பினர் நிறைய புதுமைகளை யோசித்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் சன் டிவி 'ரோஜா' சீரியலில் யாஷிகா ஆனந்த் சில அத்தியாயங்கள் வந்து செல்வது போல முக்கிய கதாபாத்திரம் ஒன்று ஏற்கிறார். அவரது நடிப்பில் வரும் காட்சிகள் விரைவில் ஷூட் செய்யப்பட உள்ளது.

இதே சீரியலில் இதற்கு முன்பு நடிகை நதியா ஒரு சில அத்தியாயங்கள் மட்டுமே வந்து செல்லும் சிறப்புத் தோற்றம் ஏற்று நடித்திருந்தார். அதேபோல, இப்போது யாஷிகா சில அத்தியாயங்கள் மட்டுமே ஏற்று நடிக்க உள்ளார். இதற்காக யாஷிகாவுக்கு லட்சத்தில் சம்பளம் கொடுக்க சீரியல் தயாரிப்பு குழுவும் முடிவெடுத்திருக்கிறது. யாஷிகா நடிக்கும் தோற்றம் மட்டும் இப்போதைக்கு சஸ்பென்ஸாக வைத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in