சென்னையிலிருந்து தேனி பயணம்: 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பாரதிராஜா

சென்னையிலிருந்து தேனி பயணம்: 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பாரதிராஜா
Updated on
1 min read

தமிழகத்தில் கரோனா தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சென்னையில் 279 பேர் உட்பட தமிழகம் முழுவதும் ஒரேநாளில் 508 பேர் கரோனா வைரஸால் பாதிக் கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் வைரஸ் தொற்றின் பாதிப்பு 2 ஆயிரத்தை கடந்துள்ளது. வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இயக்குநர் பாரதிராஜா சென்னையில் இருந்து தேனி சென்றதால் அங்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இயக்குநர் பாரதிராஜா தேனி அல்லி நகரத்தைச் சேர்ந்தவர். இவருக்கு தேனி என்ஆர்டி.நகரில் வீடு உள்ளது. ஓய்வு நேரங்களில் இங்கு வந்து தங்கிச் செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று (05.05.20) மாலை சென்னையில் இருந்து இவர் தேனி வந்தார்.

மாவட்ட எல்லையில் அவரை சுகாதாரத்துறையினர் சோதித்தனர். இதில் பாரதிராஜாவுக்கு தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது. இருப்பினும் சிவப்பு மண்டலப்பகுதியில் இருந்து அவர் வந்ததால் வீட்டில் 14 நாட்கள் தனிமையில் இருக்கும்படி தேனி நகராட்சி அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். இதன்படி அவரது வீட்டில் இதற்கான தகவல் ஒட்டப்பட்டது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in