விசுவின் மறைவு மனதை மிகவும் பாதித்துள்ளது: ரஜினி

விசுவின் மறைவு மனதை மிகவும் பாதித்துள்ளது: ரஜினி
Updated on
1 min read

விசுவின் மறைவு மனதை மிகவும் பாதித்துள்ளதாக ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

திரையுலகில் பல்வேறு வரவேற்பைப் பெற்ற படங்களை இயக்கியவரும், பல படங்களுக்கு கதாசிரியராக பணிபுரிந்த விசு இன்று (மார்ச் 22) மாலை காலமானார். அவருக்கு வயது 74. அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களுடைய இரங்கலைத் தெரிவித்து வருகிறார்கள்.

விசு மறைவு தொடர்பாக ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

என் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய நண்பர், ஒப்பற்ற எழுத்தாளர், இயக்குநர், நடிகர் விசு அவர்களின் மறைவு என் மனதை மிகவும் பாதித்துள்ளது. அவரை இழந்து வருந்தும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு ரஜினி தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in