Published : 21 Mar 2020 20:16 pm

Updated : 21 Mar 2020 20:16 pm

 

Published : 21 Mar 2020 08:16 PM
Last Updated : 21 Mar 2020 08:16 PM

டிஜிட்டலில் வெளியிடப்படுகிறதா 'நரகாசூரன்'?

naragasooran-digital-release

கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி, நீண்ட நாட்களாகத் தயாரிப்பில் இருக்கும் 'நரகாசூரன்' டிஜிட்டலில் வெளியாகும் எனத் தெரிகிறது.

'துருவங்கள் 16' படத்துக்குப் பிறகு கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான படம் 'நரகாசூரன்'. அரவிந்த் சாமி, ஸ்ரேயா சரண், சந்தீப் கிஷன், ஆத்மிகா, இந்திரஜித் ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை கெளதம் மேனன், கார்த்திக் நரேன் மற்றும் பத்ரி கஸ்தூரி இணைந்து தயாரித்துள்ளனர்.


கெளதம் மேனனுக்கு ஏற்பட்ட பைனான்ஸ் சிக்கலால், இந்தப் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. இந்தப் படத்தை முன்வைத்து கெளதம் மேனன் - கார்த்திக் நரேன் இருவருமே ட்விட்டரில் வார்த்தைப் போரில் ஈடுபட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது. இப்போது அனைத்து பிரச்சினைகளும் சுமுகமாக முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது.

ஏனென்றால், பலமுறை இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டு ஒத்துவைக்கப்பட்டுள்ளது. தற்போது 'நரகாசூரன்' படத்தை டிஜிட்டலில் வெளியிடலாமா என்று ஆம், இல்லை எனத் தேர்வு செய்யச் சொல்லி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி பிரிவில் கேட்டுள்ளார் இயக்குநர் கார்த்திக் நரேன். இதற்குப் பலரும் ஆம் என்றே பதிலளித்துள்ளனர். இதனால் விரைவில் டிஜிட்டலில் 'நரகாசூரன்' வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

'நரகாசூரன்' படத்தைத் தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளியான 'மாஃபியா' எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. அதனைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் உருவாகும் புதிய படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார் கார்த்திக் நரேன். இந்தப் படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

அன்பு வாசகர்களே....


வரும் ஏப்ரல் 14 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!



நரகாசூரன்நரகாசூரன் வெளியீடுநரகாசூரன் டிஜிட்டலில் வெளியீடுஅரவிந்த் சாமிஇயக்குநர் கார்த்திக் நரேன்சந்தீப் கிஷன்ஸ்ரேயாஆத்மிகாஇந்திரஜித்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author