தலைப்பு சர்ச்சையில் அருவா

தலைப்பு சர்ச்சையில் அருவா
Updated on
1 min read

ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள 'அருவா' படத்தின் தலைப்பு சர்ச்சையில் சிக்கியுள்ளது.

'சூரரைப் போற்று' படத்தைத் தொடர்ந்து, ஹரி இயக்கத்தில் உருவாகவுள்ள 'அருவா' படத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கியுள்ளார் சூர்யா. ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ள, இந்தப் படத்தில் சூர்யாவுடன் நடிக்கும் நடிகர்கள் தேர்வு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்துக்கு இமான் இசையமைக்கவுள்ளார்.

இந்தப் படம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு, சில நாட்கள் தான் ஆகிறது. அதற்கு இதன் தலைப்பு சர்ச்சையாகியுள்ளது. என்னவென்றால், பாடலாசிரியர் ஏகாதசி 'அருவா' என்ற பெயரில் படம் ஒன்றை இயக்கி முடித்துள்ளார். தருண்கோபி தயாரித்துள்ள இந்தப் படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது.

எப்படி சூர்யா - ஹரி கூட்டணிக்கு இந்த தலைப்பின் உரிமை கிடைத்தது என்று தெரியவில்லை. இந்த தலைப்பு சர்ச்சை குறித்து ஏகாதசி, "எப்படி சூர்யா படத்துக்கு 'அருவா' என்று தலைப்பு வைத்தார்கள் என்பது ஆச்சரியமாகவுள்ளது. எங்களது தலைப்பை விட்டுக் கொடுக்க மாட்டோம்" என்று தெரிவித்துள்ளார்.

சூர்யா - ஹரி கூட்டணி படம் இன்னும் படப்பிடிப்பு தொடங்கப்படாததால், விரைவில் தலைப்பை மாற்றி அறிவிப்பார்கள் எனத் தெரிகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in