விஜய்யின் குணநலன்கள் ஹிப் ஹாப் ஆதியிடமும் உள்ளன: கே.எஸ்.ரவிகுமார் ஒப்பீடு

விஜய்யின் குணநலன்கள் ஹிப் ஹாப் ஆதியிடமும் உள்ளன: கே.எஸ்.ரவிகுமார் ஒப்பீடு
Updated on
1 min read

விஜய்யிடம் இருக்கும் சில குணநலன்கள் ஹிப் ஹாப் ஆதியிடமும் உள்ளன என இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் ஒப்பீடு செய்துள்ளார்.

ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிப்பில் கடந்த 14-ம் தேதி ரிலீஸான படம் ‘நான் சிரித்தால்’. ராணா இயக்கிய இந்தப் படத்தில் ஐஸ்வர்யா மேனன், கே.எஸ்.ரவிகுமார், படவா கோபி, முனீஸ்காந்த், ரவிமரியா, யோகி பாபு, ஷா ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அவ்னி மூவிஸ் சார்பில் சுந்தர்.சி - குஷ்பு இருவரும் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர். இந்தப் படத்தின் வெற்றி விழா, நேற்று (பிப்ரவரி 18) நடைபெற்றது.

அதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், “ஒரு விஷயத்தில் இறங்கும்போது, நமக்கு எது ப்ளஸ், மைனஸ் எனத் தெரிந்துகொண்டு இறங்க வேண்டும். ஆதி, தன்னுடைய ப்ளஸ் என்னவெனத் தெரிந்து வைத்துள்ளார். அதனால்தான், அவரால் தொடர்ந்து ஹிட் கொடுக்க முடிகிறது.

என்னைப் பொறுத்தவரையில் விஜய்க்கும் ஆதிக்கும் ஒற்றுமை இருக்கிறது. நான் சொல்வது நடிப்பில் இல்லை. விஜய்யின் நடிப்பு தனியாக இருக்கும். நேரில் பார்க்கும்போது விஜய் எப்படி வெட்கப்படுவாரோ, அந்த மாதிரி ஆதியும் எப்போதும் வெட்கப்பட்டு, பணிவு, சிரிப்புடன் இருப்பார்.

அவருடைய ஸ்டேஜ் ஷோ ஒன்று பார்த்தேன், அசந்துட்டேன். எவ்வளவு எனர்ஜி... அத்தனைப் பார்வையாளர்களையும் ஆட வைக்க இவர் ஒருத்தர் போதும். தன்னுடைய படங்கள் மூலம் ரசிகர்களையும் ஆடவைத்துக் கொண்டிருக்கிறார்” எனத் தெரிவித்தார்.

இதை ‘மிஸ்’ பண்ணிடாதீங்க:

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in