அஜித் காயம்: இந்திய அளவில் ட்ரெண்டாகும் #GetWellSoonThala 

அஜித் காயம்: இந்திய அளவில் ட்ரெண்டாகும் #GetWellSoonThala 
Updated on
1 min read

'வலிமை' படப்பிடிப்பில் ஏற்பட்ட காயத்தால், தற்போது இந்திய அளவில் #GetWellSoonThala என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

அஜித் நடித்து வரும் 'வலிமை' படப்பிடிப்பில் அவருக்கு சிறுவிபத்து ஏற்பட்டது. பைக் சண்டைக் காட்சியின்போது, பைக் கட்டுப்பாட்டை இழந்ததால் அஜித் கீழே விழுந்ததில் அவருக்குக் கையில் சிறு காயங்கள் ஏற்பட்டன. ஆனால், காயத்துக்குப் பிறகும் கூட தனது காட்சிகளை முடித்துவிட்டுச் சென்றார் அஜித்.

அஜித்துக்கு ஏற்பட்ட காயம் தொடர்பான தகவல் எப்படியோ வெளியாகிவிட்டது. இதனைத் தொடர்ந்து அஜித் ரசிகர்கள், அவர் விரைவில் சீக்கிரம் குணமாக வேண்டும் என்று ஹேஷ்டேக் ஒன்றை உருவாக்கி ட்வீட் செய்து வருகிறார்கள்.

இதனால் #GetWellSoonThala என்ற ஹேஷ்டேக் இந்தய அளவில் ட்ரெண்டாகி வருகிறது. இந்த ஹேஷ்டேக்கைக் குறிப்பிட்டு பல்வேறு திரையுலகப் பிரபலங்களும், அஜித் விரைவில் குணமாக வேண்டும் என ட்வீட் செய்து வருகிறார்கள்.

அஜித் காயம் தொடர்பாக சாந்தனு தனது ட்விட்டர் பதிவில், "தல விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். டூப் இல்லாமல் ஸ்டண்ட் காட்சிகளில் எப்போதும் அதிக ரிஸ்க் எடுக்கும் நடிகர் அவர். அவருக்காக அதிக பிரார்த்தனைகளும் அன்பும்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும். டிடி உள்ளிட்ட சில பிரபலங்களும் இது தொடர்பாக ட்வீட் செய்துள்ளனர்.

இந்த மாத இறுதி அல்லது மார்ச் முதல் வாரத்தில் ஒரு பெரிய ஷெட்டியூலுக்கு 'வலிமை' படக்குழு திட்டமிட்டு வருகிறது.

தவறவிடாதீர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in