குடும்பத்தையும், கட்சியையும் காப்பாற்ற மீண்டும் நடிக்கிறேன்: பவன் கல்யாண்

குடும்பத்தையும், கட்சியையும் காப்பாற்ற மீண்டும் நடிக்கிறேன்: பவன் கல்யாண்
Updated on
1 min read

குடும்பத்தையும், கட்சியையும் காப்பாற்ற மீண்டும் நடிக்கிறேன் என்று கட்சிக் கூட்டமொன்றில் பேசியுள்ளார் பவன் கல்யாண்

அரசியலில் கவனம் செலுத்தத் தொடங்கியதால், திரையுலகிலிருந்து விலகியே இருந்தார் பவன் கல்யாண். தற்போது மீண்டும் திரையுலகில் 3 படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். 'பிங்க்' ரீமேக், க்ரிஷ் இயக்கத்தில் உருவாகும் படம், ஹரிஷ் ஷங்கர் இயக்கத்தில் உருவாகவுள்ள படம் ஆகியவற்றுக்காகத் தொடர்ச்சியாகத் தேதிகள் கொடுத்துள்ளார் பவன் கல்யாண்.

படப்பிடிப்புக்கு இடையே தனது ஜனசேனா கட்சிப் பணிகளையும் கவனித்து வருகிறார். நேற்று (பிப்ரவரி 16) தனது கட்சிக் கூட்டம் ஒன்றில் பேசினார் பவன் கல்யாண். அப்போது தான் மீண்டும் நடிக்க வந்ததிற்கான காரணத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

அதில் பவன் கல்யாண், "என் குடும்பத்தை ஆதரிக்கும் வண்ணம் வேறு தொழிற்சாலைகளோ, மாத வருமானம் வரும் தொழிலோ எனக்குக் கிடையாது. அதனால்தான் என் குடும்பத்தையும், கட்சியையும் காப்பாற்ற மீண்டும் நடிக்கிறேன்.

நான் சம்பாதிக்கவில்லை என்றால் எப்படி எனது குழந்தைகள் அவர்களின் பள்ளிக் கட்டணத்தைக் கட்டுவார்கள்? அவர்கள் என்னைச் சார்ந்து இருப்பதால் அவர்களைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு எனக்கிருக்கிறது. போதிய பணம் இல்லாமல் எப்படி என்னால் கட்சியை நடத்த முடியும்?" என்று தெரிவித்துள்ளார் பவன் கல்யாண்

தவறவிடாதீர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in