

விஜய் சேதுபதி நடிக்கவுள்ள புதிய படத்தில், அவர் ஜோடியாக நயன்தாரா மற்றும் சமந்தா இருவரும் நடிக்கின்றனர்.
விஜய் சேதுபதி நடிப்பில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான படம் ‘நானும் ரெளடிதான்’. 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 21-ம் தேதி வெளியான இந்தப் படத்தை, தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரித்தது. அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைத்தார்.
விஜய் சேதுபதி ஜோடியாக நயன்தாரா நடிக்க, ராதிகா சரத்குமார், பார்த்திபன், ஆர்ஜே பாலாஜி, ஆனந்த்ராஜ், அழகம் பெருமாள் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர். இந்தப் படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.
எனவே, மறுபடியும் விஜய் சேதுபதியை வைத்து ஒரு படத்தை இயக்க முடிவெடுத்தார் விக்னேஷ் சிவன். இந்தப் படத்துக்கு ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டது. ஏ.எம்.ரத்னம் தயாரிக்க, அனிருத் இசையமைப்பதாக முடிவெடுக்கப்பட்டது.
2016-ம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்த முடிவு, தற்போதுதான் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. ஏ.எம்.ரத்னத்துக்குப் பதிலாக லலித் குமார் மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.
விஜய் சேதுபதி ஜோடியாக நயன்தாரா மற்றும் சமந்தா இருவரும் நடிக்கின்றனர். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு காதலர் தினத்தை முன்னிட்டு (பிப்ரவரி 14) இன்று வெளியாகியுள்ளது.
இவர்களுடன் இணைந்து நடிக்கவுள்ள மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதை ‘மிஸ்’ பண்ணிடாதீங்க...