காதல் முறிவு: காதலனைச் சாடும் சனாகான்

காதல் முறிவு: காதலனைச் சாடும் சனாகான்
Updated on
1 min read

நடன இயக்குநர் மெல்வின் லூயிஸுடனான காதல் முறிந்துவிட்டது. அவர் ஒரு ஏமாற்றுக்காரர் என்று சனாகான் தெரிவித்துள்ளார்.

'சிலம்பாட்டம்', 'தம்பிக்கு எந்த ஊரு', 'பயணம்' உள்ளிட்ட தமிழ்ப் படங்கள் மட்டுமன்றி, சில தெலுங்கு மற்றும் கன்னடப் படங்களில் நடித்துள்ளார் சனாகான். பின்பு சில இந்திப் படங்களில் நடிக்கும்போது, அவருக்கும் நடன இயக்குநர் மெல்வின் லூயிஸுக்கும் காதல் ஏற்பட்டது.

இருவரும் ஏப்ரல் 26, 2019-ல் தங்களுடைய காதலை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதிப்படுத்தினார்கள். இதனைத் தொடர்ந்து பலரும் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

இதனிடையே, தனக்கும் மெல்வின் லூயிஸுக்கும் இடையே ஆன காதல் முறிந்துவிட்டதாக சனாகான் அறிவித்துள்ளார். மேலும், மெல்வின் ஒரு ஏமாற்றுக்காரர் என்றும் தனது காதல் உண்மையானதாக இருந்தபோதிலும், அவரால் தனது அமைதி குலைந்து கலங்கிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது லூயிஸ் வேறொரு பெண்ணுடன் நட்பில் இருப்பதாகவும், அவருடைய பெயரைச் சொல்வது நியாயமில்லை எனவும் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் சனாகான்.

சனாகான் - மெல்வின் லூயிஸ் இருவருமே தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து, இருவரும் இணைந்திருக்கும் புகைப்படங்களை நீக்கியுள்ளனர். மும்பையில் நடனப் பள்ளி ஒன்றை நடத்தி வருபவர் மெல்வின் லூயிஸ். பல்வேறு பாலிவுட் பிரபலங்களுக்கு நடனப் பயிற்சியும் அளித்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது

தவறவிடாதீர்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in