விநியோகஸ்தர்கள் கோரிக்கையை ரஜினி ஏற்கக்கூடாது: ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்

விநியோகஸ்தர்கள் கோரிக்கையை ரஜினி ஏற்கக்கூடாது: ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்
Updated on
1 min read

விநியோகஸ்தர்கள் கோரிக்கையை ரஜினி ஏற்கக்கூடாது என்று இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் 'தர்பார்'. லைகா நிறுவனம் தயாரிப்பில் வெளியான இந்தப் படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இதனால், இந்தப் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் தங்களுக்கு நஷ்ட் ஈடு தர வேண்டும் என்று ரஜினியையும், ஏ.ஆர்.முருகதாஸையும் சந்திக்கச் சென்னை வந்தார்கள்.

ஆனால், இருவரையுமே சந்திக்க முடியாமல் தற்போது குழுவாக உருவாகியுள்ளனர். இந்தச் சம்பவத்தால் தனக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்று ஏ.ஆர்.முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

மேலும், இயக்குநர்கள் சங்கத்திலும் ஏ.ஆர்.முருகதாஸ் புகார் அளித்துள்ளார். இந்தப் புகார் தொடர்பாக ஆர்.கே.செல்வமணி, "ஏ.ஆர்.முருகதாஸ் வீட்டிற்கும், அலுவலகத்திற்கும் சிலர் சென்று வன்முறையாக நடந்து கொண்டதாக இயக்குநர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். அவரைக் குற்றம்சாட்டி நோட்டீஸ் எல்லாம் ஒட்டியிருக்கிறார்கள். இதுவொரு தனிப்பட்ட தாக்குதல் மாதிரி தெரிகிறது.

தயாரிப்பாளரிடமிருந்து விநியோகஸ்தர்கள் படத்தை வாங்குகிறார்கள். அப்போது வரும் லாபம் - நஷ்டம் இருவரையுமே சேரும். அந்தப் படத்தை உருவாக்கிய யாருக்குமே இதில் சம்பந்தமில்லை. ஏ.ஆர்.முருகதாஸிடம் இப்போது செல்வது, தொழில் தர்மத்துக்கு எதிரான ஒரு செயலாகும். இந்த மாதிரியான செயலை பெப்சி அமைப்பு வன்மையாகக் கண்டிக்கிறது.

தர்பார் பிரச்சினைத் தொடர்பாக ரஜினி சார் பேசக்கூடாது. ஏனென்றால், இப்போது பேசி பணம் கொடுத்துவிட்டார் என்றால் அடுத்து மற்றவர்களும் வந்து வலியுறுத்துவார்கள். பாபா படம் அவரது சொந்த தயாரிப்பு என்பதால் கொடுத்தார்" என்று பேசியுள்ளார் ஆர்.கே.செல்வமணி

தவறவிடாதீர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in