'நாடோடிகள்' நடிகர் கோபாலகிருஷ்ணன் மரணம்

'நாடோடிகள்' நடிகர் கோபாலகிருஷ்ணன் மரணம்
Updated on
1 min read

'நாடோடிகள்' படத்தின் மூலம் பிரபலமான நடிகர் கோபாலகிருஷ்ணன் உடல்நலக் குறைவால் இன்று உயிரிழந்தார்.

சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடித்த 'நாடோடிகள்' படத்தில் அனன்யாவுக்கு அப்பாவாக நடித்தவர் கே.கே.பி கோபாலகிருஷ்ணன். இந்தப் படத்தில் இவருக்கும், சசிகுமாருக்கும் இடையேயான காட்சிகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. இதனைத் தொடர்ந்து 'நாடோடிகள்' கோபால் என்று தமிழ்த் திரையுலகில் அறியப்பட்டார்.

இவர் சமுத்திரக்கனியின் நெருங்கிய நண்பர் ஆவார். ஆகையால், அவருடைய இயக்கத்தில், தயாரிப்பில் வெளியான படங்களில் இவருக்கென்று ஒரு கதாபாத்திரம் இருக்கும். இவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இதனிடையே இன்று (பிப்ரவரி 5) காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவருடைய உடல் தகனம் மாலையே நடைபெறவுள்ளது.

இவருக்கு கவிதா என்ற மனைவியும், சுரபி மற்றும் ஸ்ரேயா என்ற மகள்களும் இருக்கிறார்கள். கோபாலின் திடீர் மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

தவறவிடாதீர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in