

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் 'புலி' படத்தின் இசை, ஆகஸ்ட் 2-ம் தேதி சென்னையில் வெளியிட இருக்கிறார்கள்.
சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் படம் 'புலி'. ஸ்ரீதேவி, ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், சுதீப் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் விஜய்யோடு நடித்திருக்கிறார்கள். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்து வரும் இப்படத்துக்கு நட்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பி.டி.செல்வகுமார் மற்றும் தமீன் பிலிம்ஸ் இணைந்து தயாரித்து வருகிறார்கள்.
இப்படத்தின் முழுப் படப்பிடிப்பும் முடிந்து, தற்போது இறுதிக் கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஆகஸ்ட் 2-ம் தேதி இப்படத்தின் இசையை பிரம்மாண்டமாக வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.
விஜய் ரசிகர்கள் பலரும் பங்கேற்பார்கள் என்ற காரணத்தால் சென்னையில் பிரம்மாண்ட இடத்திற்கு அனுமதி கேட்டு வருகிறார்கள்.