இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு; இயக்குநர் சங்கத் தலைவர் பதவிக்கு ஆர்.கே.செல்வமணி, வித்யாசாகர் போட்டி; பொதுச் செயலாளர், பொருளாளர் போட்டியின்றி தேர்வு

இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு; இயக்குநர் சங்கத் தலைவர் பதவிக்கு ஆர்.கே.செல்வமணி, வித்யாசாகர் போட்டி; பொதுச் செயலாளர், பொருளாளர் போட்டியின்றி தேர்வு
Updated on
1 min read

சென்னை

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு ஆர்.கே.செல்வமணி, வித்யாசாகர் போட்டியிடுகின்றனர். இயக்குநர் அமீர் தலைமையிலான அணியினர் போட்டியில் இருந்து வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து பொதுச் செயலாளர் பதவிக்கு ஆர்.வி.உதயகுமாரும், பொருளாளர் பதவிக்கு பேரரசும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு திரைப்பட இயக்கு நர்கள் சங்கத் தேர்தல், சென்னை வடபழனியில் உள்ள தமிழ்நாடு இசைக் கலைஞர்கள் சங்க அலு வலகத்தில் வரும் 21-ம் தேதி நடக் கிறது. முன்னதாக இத்தேர்தலில் தலைவர் பதவிக்கு இயக்குநர் பாரதிராஜா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

மற்ற பதவிகளுக்கான தேர்தல் ஜூலை 14-ம் தேதி நடத்த திட்ட மிடப்பட்டது. இதற்கிடையே, தலை வர் பதவியை ராஜினாமா செய் வதாக பாரதிராஜா திடீரென அறி வித்தார். உடனடியாக பொதுக் குழு கூட்டப்பட்டு தேர்தல் ஜூலை 21-ம் தேதிக்கு மாற்றப்பட்டது.

இயக்குநர்கள் அமீர், எஸ்.பி. ஜனநாதன் உள்ளிட்டோர் இயக்கு நர் சங்கத் தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தனர். தேர்தல் விதி 20-ன் படி அமீர், எஸ்.பி.ஜனநாதன் ஆகியோ ரது மனுவில் விதிகள் மீறப்பட்டுள்ள தாக தேர்தல் அதிகாரியான உயர் நீதிமன்ற வழக்கறிஞர் செந்தில் நாதன் மனுக்களை நிராகரித்தார்.

போட்டியில் இருந்து வாபஸ் பெற்றுக்கொள்வதாக அமீர் அணி யினர் அறிவித்தனர். இதையடுத்து, இயக்குநர் சங்கத் தேர்தலில் இருந்து அமீர் அணி விலகிய தாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது.

இதுதொடர்பாக அமீர், கரு.பழனியப்பன், வெற்றிமாறன், சமுத்திரக்கனி, பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட 13 இயக்குநர்கள் கையெழுத்திட்டு கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். அந்த அணியினர் விலகியதால் பொதுச் செயலாளர் பதவிக்கு ஆர்.வி.உதய குமாரும், பொருளாளர் பதவிக்கு பேரரசும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

துணை தலைவர் பதவிக்கு கே.எஸ்.ரவிக்குமார், ரவிமரியா, வேல்முருகன், இணை செயலாளர் பதவிக்கு சித்ரா லட்சுமணன், `ஏகம்பவாணன், லிங்குசாமி, நாகராஜன் மணிகண்டன், ராஜா கார்த்திக், சுந்தர் சி, செயற்குழு உறுப்பினர் பதவிக்கு மனோபாலா, ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்ட 30 பேர் போட்டியிடுகின்றனர்.

அறிவிக்கப்பட்டபடி, வரும் 21-ம் தேதி காலை 7 மணி முதல் 4 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது. உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டு, அன்று இரவே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in