தூங்காவனம்: போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் த்ரிஷா?

தூங்காவனம்: போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் த்ரிஷா?
Updated on
1 min read

ராஜேஷ் இயக்கத்தில் கமல் நடித்துவரும் 'தூங்காவனம்' படத்தில் போலீஸ் அதிகாரியாக த்ரிஷா நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

'உத்தம வில்லன்' படத்தைத் தொடர்ந்து கமல்ஹாசன் தனது இணை இயக்குநர் ராஜேஷ் இயக்கி வரும் 'தூங்காவனம்' படத்தில் நடித்து வருகிறார். த்ரிஷா, பிரகாஷ்ராஜ், யூகி சேது, மதுஷாலினி, மனிஷா கொய்ராலா உள்ளிட்ட பலர் இப்படத்தில் கமலுடன் நடித்து வருகிறார்கள்.

ஒரே இரவில் நடக்கும் த்ரில்லர் வகை கதையான 'தூங்காவனம்' படத்தில் போலீஸ் அதிகாரியாக கமல் நடித்து வருகிறார். இப்படத்தில் த்ரிஷா கமலுடன் வரும் போலீஸ் அதிகாரியாகவே நடித்திருக்கிறார் என்றும், கமலுடன் இணைந்து சண்டைக் காட்சிகளில் எல்லாம் த்ரிஷா நடித்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

பிரெஞ்சு படமான 'ஸ்லீப்லஸ் நைட்' படத்தின் தமிழ் ரீமேக்கே 'தூங்காவனம்' என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இப்படத்தில் கமலுக்கு மனைவியாக கெளவர வேடத்தில் மனிஷா கொய்ராலா நடித்திருக்கிறார்.

மேலும், ஹைதராபாத்தில் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்தவுடன், விரைவில் சென்னையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in