சண்டைக்கோழி 2 படத்துக்கு இமான் இசை

சண்டைக்கோழி 2 படத்துக்கு இமான் இசை
Updated on
1 min read

லிங்குசாமி இயக்கத்தில் உருவாக இருக்கும் 'சண்டைக்கோழி 2' படத்திற்கு இசையமைப்பாளராக இமான் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.

'அஞ்சான்' படத்தைத் தொடர்ந்து விஷால் நடிப்பில் 'சண்டைக்கோழி 2' படத்திற்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார் லிங்குசாமி. இப்படத்தை விஷால் நாயகனாக நடித்து, தயாரிக்கவும் இருக்கிறார்.

ஆகஸ்ட் மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. லிங்குசாமி படங்களில் யுவன் தான் இசையமைப்பாளராக பணியாற்றி வந்தார். தற்போது 'சண்டைக்கோழி 2' படத்திற்கு இமான் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.

விஷால், சூரி, ராஜ்கிரண் உள்ளிட்டவர்கள் நடிக்கும் இப்படத்தில் முதல் பாக நாயகியான மீரா ஜாஸ்மின் சிறு வேடத்தில் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. 'சண்டைக்கோழி 2' படத்தில் நாயகியாக நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in