அட்லீ - விஜய் படத்தின் பாடல்கள் புதிய ட்ரெண்ட்டை உருவாக்கும்: ஜி.வி.பிரகாஷ்

அட்லீ - விஜய் படத்தின் பாடல்கள் புதிய ட்ரெண்ட்டை உருவாக்கும்: ஜி.வி.பிரகாஷ்
Updated on
1 min read

அட்லீ - விஜய் படத்தின் பாடல்கள் புதிய ட்ரெண்ட்டை உருவாக்கும் என அப்படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சிம்புதேவன் இயக்கிவரும் 'புலி' படத்தைத் தொடர்ந்து இயக்குநர் அட்லீ இயக்கவிருக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் விஜய். இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது

'புலி' படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவு பெற இருக்கிறது. அதனைத் தொடர்ந்து அட்லீ - விஜய் படப்பிடிப்பு துவங்க திட்டமிட்டு இருக்கிறார்கள். முன்னதாக இயக்குநர் அட்லீ - ஜி.வி.பிரகாஷ் இருவரும் படத்தின் பாடல்கள் பணிகளை துவங்கி விட்டார்கள்.

பாடல் பணிகள் குறித்து ஜி.வி.பிரகாஷ், "அட்லீ - விஜய் இணையும் புதிய படத்தில் எல்லா பாடல்களுமே புதிய ட்ரெண்டை உருவாக்கும். இன்னும் சில மாதங்களில் பாடல்கள் வெளியாகும். முழு வீச்சில் இசையமைக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது

இளையதளபதியின் அதிரடி நடனத்தை காண விரும்புபவர்களுக்காக ஒரு உலக லோக்கல் பாடல் காத்திருக்கிறது” என்று தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்

ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் உருவாகும் 50வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் விஜய் ஜோடியாக சமந்தா, ஏமி ஜாக்சன் ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். தாணு தயாரிக்க இருக்கிறார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in