ஒரே வீட்​டுக்​குள் நடக்​கும் கதை ‘4 இடியட்ஸ்’

ஒரே வீட்​டுக்​குள் நடக்​கும் கதை ‘4 இடியட்ஸ்’

Published on

அறி​முக இயக்​குநர் சஜோ சுந்​தர் முரு​கேசன் இயக்​கத்​தில் உரு​வாகி உள்ள திரைப்​படம்​, ‘4 இடியட்ஸ்’. இதில் புகழ், பிரக்யா நயன், திடியன், இந்​திரன், ரவி மரி​யா, வின்​சென்ட் அசோகன், ‘கும்​கி’ அஸ்​வின் உள்​ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

யு.கே.செந்​தில் குமார் ஒளிப்​பதிவு செய்​திருக்​கும் இந்​தப்​படத்​துக்கு சுபாஷ் முனி ரத்​தினம் இசையமைத்​துள்​ளார். அன்பே சிவம், புதுப்​பேட்​டை, கோகுலத்​தில் சீதை, உன்னை நினைத்து உள்பட பல படங்​களைத் தயாரித்த லக் ஷ்மி மூவி மேக்​கர்ஸ் நிறு​வனம், அதன் நிறு​வனர்​கள் கே.முரளிதரன், சுவாமி நாதன் ஆகியோர் மறைவுக்குப்பின் படத் தயாரிப்​பில் ஈடு​ப​டா​மல் இருந்​தது

தற்​போது கே. முரளிதரனின் மகன்​களான எம். கோகுல் கிருஷ்ணன், டாக்​டர்  வத்​ஸன் இணைந்து தயாரித்துள்ளனர். இப்​படம் பற்றி இயக்​குநர் சஜோ சுந்​தர் முரு​கேசன் கூறும்​போது, “இயக்​குநர் ஹரி, பிர​காஷ் ராஜ் இயக்​கிய படங்​களில் இணை இயக்​குந​ராக பணி​யாற்றி இருக்​கிறேன்.

இது என் முதல் படம். டார்க் காமெடிக்கு முக்​கி​யத்​து​வம் கொடுத்து இப்​படத்தை உரு​வாக்கி இருக்​கிறோம். புத்​தி​சாலித்​தன​மாகச் செயல்​படு​கிறோம் என நினைத்து முட்டாள்​தன​மாக நடந்​து​கொள்​ளும் 4 பேரின் கதை இது. ஒரு வீட்​டுக்​குக் கொள்​ளை​யடிக்க செல்​லும் அவர்​கள் அங்கு சிக்​கிக் கொள்​கிறார்​கள். அங்​கிருந்து எப்​படி மீள்கிறார்​கள் என்​பது படம்.

ஒரே வீட்​டுக்​குள் நடக்​கும் கதை என்​றாலும் அடுத்​தது என்ன என்​பதை யாரும் யூகிக்க முடி​யாத​படி திரைக்​கதை அமைக்​கப்​பட்​டிருக்​கிறது. பொழுது​போக்​குடன் மெசேஜும் படத்​தில் இருக்​கிறது. கொண்​டாட்ட மனநிலையில் இருந்து சினிமா இப்​போது சீரியஸ் தன்மைக்​குச் சென்​றிருக்​கிறது. அதை மாற்​றும்​ வித​மாக இப்​படம் இருக்​கும். பார்​வை​யாளர்​கள் கவலையை மறந்து ரசிக்​கும்​படி இருக்​கும். ரிலீஸுக்​கான வேலைகள் நடந்து வரு​கின்​றன” என்​றார்.

ஒரே வீட்​டுக்​குள் நடக்​கும் கதை ‘4 இடியட்ஸ்’
‘டாக்ஸிக்’ டீசர் எப்படி? - ரத்தம் தெறிக்கும் வன்முறையில் யஷ்!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in