‘டாக்ஸிக்’ டீசர் எப்படி? - ரத்தம் தெறிக்கும் வன்முறையில் யஷ்!

‘டாக்ஸிக்’ டீசர் எப்படி? - ரத்தம் தெறிக்கும் வன்முறையில் யஷ்!
Updated on
1 min read

மும்பை: யஷ் நடிப்பில், கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'டாக்ஸிக்'  திரைப்படத்தின் டீசர் இன்று வெளியானது .

யஷ் ஹீரோவாக நடிக்கும் ‘த டாக்ஸிக்’ படத்தை நடிகை கீது மோகன்தாஸ் இயக்கியுள்ளார். இதில் கியாரா அத்வானி, நயன்தாரா, ஹூமா குரேஷி, ருக்மணி வசந்த் என பலர் நடித்துள்ளனர். கன்னடம், ஆங்கிலத்தில் உருவாகியுள்ள இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது.

டீசர் எப்படி? - 'கேஜிஎஃப்' படங்களுக்குப் பிறகு யஷ் நடிக்கும் படம் என்பதால் ஏற்கனவே இருந்த எதிர்பார்ப்பை, இந்த டீசரில் இடம்பெற்றுள்ள வன்முறை மற்றும் ஆக்‌ஷன் காட்சிகள் பல மடங்கு உயர்த்தியுள்ளன. இரண்டு நிமிடங்கள் ஓடும் இந்த டீசரில், 'ராயா' என்ற கதாபாத்திரத்தில் யஷ் தோன்றுகிறார். டீசரின் ஆரம்பமே ஒரு மிகப்பெரிய போருக்கான எச்சரிக்கையுடன் தொடங்குகிறது. 

ரத்தம் தெறிக்கும் சண்டைக் காட்சிகள் மற்றும் யஷ் கையில் ஆயுதத்துடன் எதிரிகளைத் துவம்சம் செய்யும் காட்சிகள் என டீசர் முழுவதும் வன்முறை கொப்பளிக்கிறது. டீசரின் இறுதியில் கிளீன் ஷேவ் தோற்றத்தில் வரும் யஷ், "ஐ யம் ஹோம், டாடி!" என்று சொல்லும் வசனம் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. ‘டாக்ஸிக்’ டீசர் வீடியோ:

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in