நடிப்பில் முழு கவனம்: அமிதாப் கதாபாத்திரத்தில் எஸ்.ஏ.சி.

நடிப்பில் முழு கவனம்: அமிதாப் கதாபாத்திரத்தில் எஸ்.ஏ.சி.
Updated on
1 min read

'டூரிங் டாக்கீஸ்' படத்தைத் தொடர்ந்து, தொடர்ச்சியாக நடிப்பில் கவனம் செலுத்த இருக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகர்.

எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கி, தயாரித்து, நடித்த படம் 'டூரிங் டாக்கீஸ்'. இளையராஜா இசையமைத்திருந்த இப்படம் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில், தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறார் எஸ்.ஏ.சி. இரண்டு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இயக்குநர் வெங்கடேஷ் கூறிய கதை மிகவும் பிடித்திருந்ததால், அப்படத்தில் நாயகனாக நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார். ஏப்ரல் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.

இதுதவிர, இரண்டு பிள்ளைக்களுக்கு அப்பாவாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்தி திரையுலகில் அமிதாப் நடிப்பில் பெரும் வரவேற்பு பெற்ற 'பாக்பன் (Baghban)' படத்தை தழுவி உருவாகும் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தை விக்னேஷ், கிருஷ்ணா என்னும் இரட்டை இயக்குநர்கள் இயக்க இருக்கிறார்கள். தமிழில் இப்படத்திற்கு 'வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்' என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in