

1984ம் ஆண்டு வெளியான 'நூறாவது நாள்' திரைப்படம் மீண்டும் மணிவண்ணனின் மகன் இயக்கத்தில் ரீமேக்காக இருக்கிறது.
விஜயகாந்த், மோகன், சத்யராஜ், நளினி உள்ளிட்ட பலர் நடிப்பில் மணிவண்ணன் இயக்கத்தில் வெளியான படம் 'நூறாவது நாள்'. 1984ம் ஆண்டு வெளியான இப்படம் த்ரில்லர் வகையை சார்ந்ததாகும். மக்களிடையே பெரு வரவேற்பு பெற்றிருக்கிறது.
இந்நிலையில், தற்போது தனது தந்தை இயக்கிய 'நூறாவது நாள்' படத்தை ரகுவண்ணன் இயக்க திட்டமிட்டு இருக்கிறார். இப்போதுள்ள காலத்திற்கு ஏற்றவாறு திரைக்கதை அமைப்பில் மாற்றம் செய்து இயக்க திட்டமிட்டு இருக்கிறார்.
இப்படத்தில் யார் எல்லாம் நடிக்க இருக்கிறார்கள் என்பது இன்னும் முடிவாகவில்லை. ரகுவண்ணன் இயக்குவது மட்டுமே முடிவாகி இருக்கிறது.