திரைப்பட இசையமைப்பாளர் ஆகிறார் சுதா ரகுநாதன்

திரைப்பட இசையமைப்பாளர் ஆகிறார் சுதா ரகுநாதன்
Updated on
1 min read

இயக்குநர் வஸந்த் இயக்கி வரும் 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் சுதா ரகுநாதன்.

'ஆசை', 'நேருக்கு நேர்', 'பூவெல்லாம் கேட்டுப்பார்' உள்ளிட்ட பல வரவேற்பு பெற்ற படங்களை இயக்கியவர், இயக்குநர் வஸந்த். இறுதியாக அர்ஜுன், விமல், சேரன் ஆகியோர் நடித்த 'மூன்று பேர் மூன்று காதல்' என்ற படத்தை இயக்கினார்.

அப்படம் போதிய வரவேற்பை பெறவில்லை.இந்நிலையில் இயக்குநர் வஸந்த் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கியிருக்கிறார். இப்படத்தில் தனது 'சத்தம் போடாதே' படத்தில் நாயகியாக நடித்த பத்மப்ரியாவை மீண்டும் நாயகியாக்கி இருக்கிறார்.

பத்மப்ரியா உடன் கருணாகரன் நடித்து வருகிறார். இப்படம் முழுக்க பெண்களின் நடைமுறை வாழ்க்கையை சித்தரிக்கும் படமாக இயக்கி வருகிறாராம். படத்திற்கு 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள்.

இப்படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் சுதா ரகுநாதன். பார்த்திபன் இயக்கிய 'இவன்' படத்தில் ஒரு பாடலுக்கு தோன்றிய சுதா ரகுநாதன் இசையமைப்பாளராகி இருக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in