தயாரான கார்த்தி - தயங்கிய லிங்குசாமி

தயாரான கார்த்தி - தயங்கிய லிங்குசாமி
Updated on
1 min read

'கொம்பன்' படத்தைத் தொடர்ந்து கார்த்தி, லிங்குசாமி படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்க லிங்குசாமியோ இன்னும் சில மாதங்களாகும் என்று கூறிவிட்டார்.

'அஞ்சான்' கொடுத்த தோல்வியில் இன்னும் மீளாமல் இருக்கிறார் இயக்குநர் லிங்குசாமி. 'அஞ்சான்' தொடர்ந்து கார்த்தியை வைத்து 'எண்ணி 7 நாள்' என்னும் படத்தை இயக்க திட்டமிட்டார் லிங்குசாமி. 'கொம்பன்' படத்தை முடித்தவுடன், லுங்குசாமியின் படம் தொடங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால், படம் இப்போது தொடங்கும் திட்டம் இல்லையாம்.

இன்னும் கதையை மெருக்கேற்ற வேண்டும். ஆகையால் இன்னும் சில மாதங்கள் கழித்து ஆரம்பிக்கலாம். நீங்கள் தேதிகளை வேறு படத்திற்கு கொடுங்கள் என்று கூறிவிட்டார் லிங்குசாமி. இதனால், கார்த்தி தெலுங்கில் நாகார்ஜுன் உடன் நடிக்கும் படத்திற்கு தேதிகளை ஒதுக்கிவிட்டார்.

'கொம்பன்' படத்தைத் தொடர்ந்து நாகார்ஜுன் உடன் நடிக்கும் படத்தின் பணிகள் முடிந்தவுடன் தான் லிங்குசாமியின் படம் தொடங்க இருக்கிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in