மார்ச் 31ம் தேதி இரவுக்கு ஆயிரம் கண்கள் படப்பிடிப்பு தொடக்கம்

மார்ச் 31ம் தேதி இரவுக்கு ஆயிரம் கண்கள் படப்பிடிப்பு தொடக்கம்
Updated on
1 min read

அருள்நிதி நடிப்பில் உருவாகவுள்ள 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தின் படப்பிடிப்பு மார்ச் 31ம் தேதி தொடங்கவுள்ளார்கள்.

ராதாமோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பிருந்தாவனம்' படத்தில் நாயகனாக நடித்து முடித்துள்ளார் அருள்நிதி. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இப்படத்தைத் தொடர்ந்து புதுமுக இயக்குநரான மாறன் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமானார் அருள்நிதி. ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்க உள்ளார்.

மஹிமா நம்பியார் நாயகியாக நடிக்கவுள்ள இப்படத்தில் ஆனந்த்ராஜ், அஜ்மல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள். மார்ச் 31ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in