குக்கூ படத்திற்கு யூ சான்றிதழ் - 21ம் தேதி வெளியீடு

குக்கூ படத்திற்கு யூ சான்றிதழ் - 21ம் தேதி வெளியீடு
Updated on
1 min read

ராஜுமுருகன் இயக்கத்தில் தினேஷ், மாளவிகா நடித்திருக்கும் 'குக்கூ' படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'U' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள்.

'எங்கேயும் எப்போதும்', 'ராஜா ராணி' உள்ளிட்ட படங்களைத் தயாரித்த ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் அடுத்து தயாரித்திருக்கும் படம் 'குக்கூ'.

'அட்டகத்தி' தினேஷ், மாளவிகா மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்தினை ராஜுமுருகன் எழுதி இயக்கியிருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

இப்படத்தின் இசையை பிப்ரவரி 18ம் தேதி கமல்ஹாசன் வெளியிட்டார். இப்படத்தின் பாடல்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளிடையே மலரும் காதலை மையப்படுத்தி 'குக்கூ' திரைப்படத்தினை இயக்கியிருக்கிறார் ராஜுமுருகன். இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து சென்சார் அதிகாரிகளுக்கு திரையிட்டு காட்டப்பட்டது.

படத்தினைப் பார்த்த சென்சார் அதிகாரிகள், ஒரு இடத்தில் கூட கட் சொல்லாமல் 'யூ' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து, தயாரிப்பாளர்கள் படம் மார்ச் 21ம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்கள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in