ஐ-டியூன்ஸ் 2013 : சிறந்த தமிழ் ஆல்பமாக மரியான் தேர்வு

ஐ-டியூன்ஸ் 2013 : சிறந்த தமிழ் ஆல்பமாக மரியான் தேர்வு
Updated on
1 min read

ஆப்பிள் ஐ-டியூன்ஸில் 2013ன் சிறந்த ஆல்பமாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான 'மரியான்' தேர்வாகி இருக்கிறது.

தனுஷ், பார்வதி மற்றும் பலர் நடித்த படம் 'மரியான்'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, பரத்பாலா இயக்கியிருந்தார். ஆஸ்கர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளிவந்தது.

இப்படம் போதிய வரவேற்பை பெறவில்லை என்றாலும், படத்தின் இசை பெரும் வரவேற்பை பெற்றது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 'இன்னும் கொஞ்சம் நேரம்', 'நெஞ்சே எழு', 'நேற்று அவள் இருந்தால்', 'எங்க போனா ராசா' என அனைத்து பாடல்களுமே இப்போதும் அனைவராலும் கேட்கப்படுகிறது.

ஆப்பிள் ஐ-டியூன்ஸ் நிறுவனம் 2013ம் ஆண்டின் சிறந்த தமிழ் ஆல்பமாக 'மரியான்' படத்தின் இசையை தேர்வு செய்திருக்கிறார்கள்.

இது குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் தளத்தில்" 'மரியான்' படத்தின் இசையை கேட்ட அனைவருக்கும் நன்றி. ஐ-டியூன்ஸ் தளத்தில் 2013ல் சிறந்த தமிழ் ஆல்பமாக தேர்வாகி இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று கூறியிருக்கிறார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in