ஆகஸ்ட் 15-ல் தொடரி வெளியாக வாய்ப்பு

ஆகஸ்ட் 15-ல்  தொடரி வெளியாக வாய்ப்பு
Updated on
1 min read

பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் 'தொடரி' படத்தை சுதந்திர தின விடுமுறையை கணக்கில் கொண்டு வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.

பிரபு சாலமன இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ், ஹரிஷ் உத்தமன், சின்னி ஜெயந்த், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'தொடரி'. இமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரித்திருக்கிறது.

தற்போது இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. க்ளைமாக்ஸ் காட்சியில் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்குள் வேகமாக ஒரு ரயில் வருவது போன்ற காட்சிகள் இருப்பதால் அதன் கிராபிக்ஸை இறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

அனைத்து பணிகளும் முடிந்தவுடன், விரைவில் படத்தை தணிக்கை செய்து விளம்பரப்படுத்த படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. முதலில் ஜூலை மாத இறுதியில் படத்தை வெளியிட திட்டமிட்டார்கள். ஆனால், 'கபாலி' வெளியீட்டால் தற்போது சுதந்திர தின விடுமுறையை கணக்கில் கொண்டு வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.

'தொடரி' படத்தைத் தொடர்ந்து 'கொடி' படத்தை விளம்பரப்படுத்த திட்டமிட்டு இருக்கிறார் தனுஷ்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in