வடிவேலுவுடன் கருத்து வேறுபாடு: இயக்குநர் பொறுப்பிலிருந்து ராம்பாலா விலகல்

வடிவேலுவுடன் கருத்து வேறுபாடு: இயக்குநர் பொறுப்பிலிருந்து ராம்பாலா விலகல்
Updated on
1 min read

வடிவேலுவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால், இயக்குநர் பொறுப்பிலிருந்து ராம்பாலா விலகியுள்ளார்.

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'ப்ரூஸ்லீ' படம் மார்ச் 3-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

'4ஜி', 'அடங்காதே', 'பாண்டிராஜ் தயாரிக்கும் படம்', 'ஐங்கரன்' மற்றும் 'சர்வம் தாளமயம்' உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் ஜி.வி.பிரகாஷ்.

இந்நிலையில், தயாரிப்பாளர் ஸ்டீபன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் வடிவேலு இணைந்து நடிக்க ஒரு படத்தின் பணிகள் துவங்கப்பட்டது. ராம்பாலா இயக்குநராக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இப்படத்தில் வடிவேலு வில்லனாக நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. எப்போது படப்பிடிப்பு உள்ளிட்ட படக்குழுவினர் விவரங்கள் எதுவுமே வெளியாகாமல் இருந்தது.

இந்நிலையில், வடிவேலுவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் ராம்பாலா இயக்குநர் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார். தற்போது என்ன கதை, யார் இயக்குநர் என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது.

புதிய இயக்குநர் ஒருவர் ஒப்பந்தம் செய்யப்பட்டு ஜி.வி.பிரகாஷ் - வடிவேலு கூட்டணியில் படத்தை துவக்க படக்குழு முயற்சித்து வருகிறது. விரைவில் யார் இயக்குநர் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படும் என்று படக்குழு சார்பில் தெரிவித்தார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in