எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் ஜெய் நடிக்கும் ‘கேப்மாரி’

எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் ஜெய் நடிக்கும் ‘கேப்மாரி’

Published on

எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் ஜெய் நடிக்கும் படத்துக்கு ‘கேப்மாரி’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘டூரிங் டாக்கீஸ்’. கதை, திரைக்கதை, வசனம் எழுதி எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரித்த இந்தப் படத்தில், அவரே ஹீரோவாகவும் நடித்தார். அபி சரவணன், மனோபாலா, ஏ.வெங்கடேஷ், ரோபோ சங்கர் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்த இந்தப் படம், 2015-ம் ஆண்டு வெளியானது.

‘டூரிங் டாக்கீஸ்’ படத்தைத் தொடர்ந்து ‘நையப்புடை’, ‘கொடி’, ‘டிராஃபிக் ராமசாமி’, ‘ஆருத்ரா’ ஆகிய படங்களில் நடித்தார் எஸ்.ஏ.சந்திரசேகர். இதில், ‘டிராஃபிக் ராமசாமி’ படத்தில், டிராஃபிக் ராமசாமி கதாபாத்திரத்தில் படத்தின் நாயகனாக நடித்தார்.

இந்நிலையில், சில வருடங்களுக்குப் பிறகு மறுபடியும் படம் இயக்கி வருகிறார் எஸ்.ஏ.சந்திரசேகர். இந்தப் படத்தில், ஹீரோவாக ஜெய் நடிக்கிறார். ஜெய் ஜோடியாக வைபவி ஷாண்டில்யா, அதுல்யா ரவி என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கின்றனர். இந்தப் படத்தை எஸ்.ஏ.சந்திரசேகரே தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்தப் படத்துக்கு ‘கேப்மாரி’ எனத் தலைப்பு வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார் எஸ்.ஏ.சந்திரசேகர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in