மோகன்லாலின் ‘ஒடியன்’ படத்துக்கு இசையமைத்த சாம் சி.எஸ்.

மோகன்லாலின் ‘ஒடியன்’ படத்துக்கு இசையமைத்த சாம் சி.எஸ்.
Updated on
1 min read

மோகன்லால் நடித்துள்ள மலையாளப் படமான ‘ஒடியன்’ படத்துக்கு இசையமைத்துள்ளார் சாம் சி.எஸ்.

‘கடலை’, ‘புரியாத புதிர்’, ‘விக்ரம் வேதா’ ஆகிய படங்களுக்கு இசையமைத்தவர் சாம் சி.எஸ். ‘விக்ரம் வேதா’ படத்தில் பாடல்களும் பின்னணி இசையும் வெகுவாக கொண்டாடப்பட்டது. இதனால், அடுத்தடுத்து பல வாய்ப்புகள் அவரைத் தேடி வந்துள்ளன.

‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘கரு’, ‘மிஸ்டர் சந்திரமெளலி’, ‘கொரில்லா’, ‘லக்‌ஷ்மி’, ‘அடங்க மறு’, ‘வஞ்சகம் உலகம்’ ஆகிய படங்களுக்கு இசையமைத்துவரும் சாம், மோகன்லால் நடித்துள்ள ‘ஒடியன்’ படம் மூலம் முதன்முதலாக மலையாளத்திலும் காலடி எடுத்து வைத்துள்ளார்.

ஸ்ரீகுமார் மேனன் இயக்கியுள்ள இந்தப் படத்தில், மோகன்லாலுடன் சேர்ந்து பிரகாஷ் ராஜ், மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்குப் பின்னணி இசை அமைத்துள்ளார் சாம்.

இந்தப் படம் ஃபேன்டஸி த்ரில்லர் என்பதால், பழங்காலக் கருவிகளைப் பயன்படுத்தி இசையமைத்திருக்கிறார் சாம். அதுவும் 6 அடி நீளமுள்ள மூங்கிலால் ஆன புல்லாங்குழலை, அதை வாசிக்கத் தெரிந்த வயதான பெண்மணி ஒருவரை வாசித்து, படத்தில் பயன்படுத்தியிருக்கிறார் சாம்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in