விஷாலின் ‘அயோக்யா’ படத்துக்கு யு/ஏ சான்றிதழ்

விஷாலின் ‘அயோக்யா’ படத்துக்கு யு/ஏ சான்றிதழ்
Updated on
1 min read

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘அயோக்யா’ படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.

வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள படம் ‘அயோக்யா’. இந்தப் படத்தில் ஹீரோயினாக ராஷி கண்ணா நடிக்க, பார்த்திபன், கே.எஸ்.ரவிகுமார், தேவதர்ஷினி, வம்சி கிருஷ்ணா, பூஜா தேவரியா, சோனியா அகர்வால் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் வெளியான ‘டெம்பர்’ தெலுங்குப் படத்தின் ரீமேக் இது. லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.

நீண்ட நாட்களாகத் தயாரிப்பில் இருந்த இந்தப் படம், முதலில் ஏப்ரல் 19-ம் தேதி ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், திட்டமிட்டபடி இறுதிக்கட்டப் பணிகள் முடிவடையாததால் மே 10-ம் தேதி ரிலீஸ் என மாற்றப்பட்டது.

படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து, இன்று (மே 7) காலை தான் தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. ரிலீஸுக்கு இரண்டு நாட்களே உள்ள நிலையில், இப்போது தணிக்கைக்கு அனுப்பினால் திட்டமிட்டபடி படம் ரிலீஸாகுமா என்ற கேள்வி எழுந்தது.

ஆனால், தணிக்கை வாரிய உறுப்பினர்கள் உடனடியாகப் படத்தைப் பார்த்து, படத்துக்கு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in