சரவணன் - த்ரிஷா இணையும் ராங்கி

சரவணன் - த்ரிஷா இணையும் ராங்கி
Updated on
1 min read

'எங்கேயும் எப்போதும்' சரவணன் இயக்கத்தில் த்ரிஷா நடித்து வரும் படத்துக்கு 'ராங்கி' என்று தலைப்பிட்டுள்ளனர்.

'எங்கேயும் எப்போதும்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர் சரவணன். இவர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். 'எங்கேயும் எப்போதும்' படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்க, ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் வெளியிட்டது.

சாலை விபத்தில் சிக்கி, சில காலம் ஓய்வில் இருந்தார் சரவணன். தற்போது பழைய நிலைக்கு திரும்பியுள்ளார். இவருக்கு உதவும் விதமாக தான் உருவாக்கி வைத்திருந்த கதையை கொடுத்துள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ்

இக்கதைக்கு 'ராங்கி' என்று தலைப்பிட்டு படப்பிடிப்பு தொடங்கியுள்ளார்கள். லைகா நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் த்ரிஷா நடித்து வருகிறார். முழுக்க நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து இக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.

தற்போது த்ரிஷாவுடன் நடிக்கவிருப்பவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in