சிம்பு தம்பி குறளரசன் காதல் திருமணம்: இஸ்லாமியப் பெண்ணை மணக்கிறார்

சிம்பு தம்பி குறளரசன் காதல் திருமணம்: இஸ்லாமியப் பெண்ணை மணக்கிறார்
Updated on
1 min read

சிம்பு தம்பி குறளரசன், தான் காதலித்த இஸ்லாமியப் பெண்ணைக் கரம்பிடிக்கிறார்.

டி.ராஜேந்தரின் மகனும், சிம்புவின் தம்பியுமான குறளரசன், ‘இது நம்ம ஆளு’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். சிம்பு ஹீரோவாக நடித்த இந்தப் படத்தை, பாண்டிராஜ் இயக்கினார். நயன்தாரா, ஆண்ட்ரியா இருவரும் ஹீரோயின்களாக நடித்தனர்.

2016-ம் ஆண்டு இந்தப் படம் ரிலீஸானது. அதன்பிறகு வேறெந்த படத்துக்கும் இசையமைக்காத குறளரசன், தற்போது ஆல்பம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இவர், பி.எஸ்சி. (விஸ்காம்) முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், குறளரசனுக்குத் திருமணம் நிச்சயமாகியுள்ளது. தான் காதலித்த இஸ்லாமியப் பெண்ணையே திருமணம் செய்யவுள்ளார் குறளரசன். அதற்காகத்தான் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி டி.ராஜேந்தர் முன்னிலையில் இஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன். ஆனாலும், குறளரசன் என்ற தன்னுடைய பெயரை அவர் மாற்றிக் கொள்ளவில்லை.

மணப்பெண்ணின் பெயர் நபீலா ஆர். அஹமத். பி.காம். முடித்துள்ள நபீலாவின் பெற்றோர் பெயர் ரஃபி அஹமத் - ரெஹ்மத் அஹ்மத்.

இவர்களுடைய திருமண வரவேற்பு, வருகிற 29-ம் தேதி சென்னை கிண்டியிலுள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் உள்ள ராஜேந்திர ஹாலில் மாலை 7 மணிக்கு நடைபெறுகிறது. இதற்காக தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட சினிமா மற்றும் அரசியல் பிரபலங்களுக்கு அழைப்பிதழ் வைத்து வருகிறார் டி.ராஜேந்தர்.

இந்தத் திருமணத்தில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in