அயோக்யா அப்டேட்: ஒரு பாடலுக்கு ஷ்ரத்தா தாஸ் நடனம்

அயோக்யா அப்டேட்: ஒரு பாடலுக்கு ஷ்ரத்தா தாஸ் நடனம்
Updated on
1 min read

விஷால் நடித்து வரும் 'அயோக்யா' படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் ஷ்ரத்தா தாஸ் நடனமாடியுள்ளார்.

‘சண்டக்கோழி 2’ படத்துக்குப் பிறகு விஷால் நடித்து வரும் படம் ‘அயோக்யா’. ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவியாளராகப் பணியாற்றிய வெங்கட் மோகன் இயக்கி வருகிறார். இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

முதலில், இப்படத்தில் ஒரு பாடலுக்கு ஆட சன்னி லியோன் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால், தேதிகள் பிரச்சினை மற்றும் சம்பளம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு அவரை நீக்கிவிட்டது படக்குழு. தற்போது ஷ்ரத்தா தாஸ் அப்பாடலுக்கு விஷாலுடன் நடனமாடியுள்ளார்.

ராஷிகண்ணா, பார்த்திபன், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் விஷாலுடன் நடித்துள்ளனர். சாம் சி.எஸ். இசையமைத்து வரும் இப்படம் தெலுங்கில் வெளியான ‘டெம்பர்’ படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

கோடை விடுமுறை வெளியீடாக இப்படம்  வெளியாகவுள்ளது. லகரி மியூஸிக் நிறுவனம் இதன் இசை உரிமையைக் கைப்பற்றியுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in