ஏப்ரல் 19-ம் தேதி வெளியாகிறது விஷாலின் அயோக்யா

ஏப்ரல் 19-ம் தேதி வெளியாகிறது விஷாலின் அயோக்யா
Updated on
1 min read

விஷால் நடித்து வரும் 'அயோக்யா' திரைப்படம் ஏப்ரல் 19-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

‘சண்டக்கோழி 2’ படத்துக்குப் பிறகு விஷால் நடித்து வரும் படம் ‘அயோக்யா’. ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவியாளராகப் பணியாற்றிய வெங்கட் மோகன் இயக்கி வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

கோடை விடுமுறையை முன்வைத்து, ஏப்ரல் 19-ம் தேதி 'அயோக்யா' வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்படம் தெலுங்கில் வெளியான ‘டெம்பர்’ படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஷி கண்ணா, பார்த்திபன், இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பலர் விஷாலுடன் நடித்துள்ளனர். சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் டீஸருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது நினைவுகூரத்தக்கது.

கோடை விடுமுறை வெளியீடாக இப்படம் வெளியாகவுள்ளது. லகரி மியூஸிக் நிறுவனம் இதன் இசை உரிமையைக் கைப்பற்றியுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in