விஜய் ஜோடியாக விஜய் தேவரகொண்டாவின் ஹீரோயின்?

விஜய் ஜோடியாக விஜய் தேவரகொண்டாவின் ஹீரோயின்?
Updated on
1 min read

விஜய்யின் அடுத்த படத்தில், அவருக்கு ஜோடியாக விஜய் தேவரகொண்டாவின் ஹீரோயின் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.

விஜய் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு ரிலீஸான படம் ‘சர்கார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இந்தப் படத்தில், கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்தார். வரலட்சுமி சரத்குமார், பழ.கருப்பையா, ராதாரவி, யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர். சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார்.

‘சர்கார்’ படத்தைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் நடிக்கிறார் விஜய். ‘தெறி’ மற்றும் ‘மெர்சல்’ படங்களைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் மூன்றாவது படம் இது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம், தற்போதைக்கு ‘தளபதி 63’ என்று அழைக்கப்பட்டு வருகிறது.

ஏஜிஎஸ் எண்டெர்டெயின்மெண்ட்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ரூபன் எடிட்டராகவு, முத்துராஜ் கலை இயக்குநராகவும் பணியாற்றுகின்றனர். இந்தப் படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. அடுத்த வருடம் (2019) தீபாவளிக்கு இந்தப் படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் ஹீரோயின் யார் என்பதில் பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. நயன்தாரா, சமந்தா ஆகியோரது பெயர்கள் அடிபட்டு வருகின்றன. இந்நிலையில், ராஷ்மிகா மடன்னாவின் ரசிகர் ஒருவர், ராஷ்மிகா தான் ‘தளபதி 63’ படத்தின் ஹீரோயின் என ட்விட்டரில் பதிவிட்டு, அதில் அட்லீ, விஜய் ஆகியோரையும் டேக் செய்துள்ளார்.

அந்த ட்வீட்டுக்குக் கீழே, ‘டேய்... எனக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடாதேடா...’ என நகைச்சுவையாகத் தெரிவித்துள்ளார். ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா ஜோடியாக ‘கீதா கோவிந்தம்’ தெலுங்குப் படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in