பவதாரிணி நினைவாக ஆர்கெஸ்ட்ரா: இளையராஜா அறிவிப்பு

பவதாரிணி நினைவாக ஆர்கெஸ்ட்ரா: இளையராஜா அறிவிப்பு
Updated on
1 min read

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி. பின்னணி பாடகியான இவர், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஆண்டு கொழும்பில் காலமானார். அவரது மறைவுக்குப் பிறகு நடைபெற்ற நினைவேந்தல் கூட்டத்தில் மகள் பவதாரிணிக்காக, ஆர்கெஸ்ட்ரா ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டிருப்பதாகக் கூறியிருந்தார் இளையராஜா.

இந்நிலையில் தற்போது அதற்கான அறிவிப்பை தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். திறமை, விருப்பம் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்குமாறும் இளையராஜா கோரியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் `என்னுடைய மகள் பவதராணியின் நினைவாக, ‘பவதா மகளிர் ஆர்கெஸ்ட்ரா’வை உருவாக்க முடிவெடுத்திருப்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதற்காக திறமையுள்ள பெண் பாடகர்கள், இசைக் கலைஞர்கள் எங்களை தொடர்பு கொள்ளலாம். விருப்பம் உள்ளவர்கள் allgirlsorchestra@gmail.com என்கிற மெயிலுக்கு தங்களின் விவரங்களை அனுப்பலாம்' என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in