நெட்பிளிக்ஸ் வெப் தொடரில் பிரியங்கா மோகன்!

நெட்பிளிக்ஸ் வெப் தொடரில் பிரியங்கா மோகன்!
Updated on
1 min read

தமிழில், டான், எதற்கும் துணிந்தவன், கேப்டன் மில்லர் உள்பட பல படங்களில் நடித்திருப்பவர் பிரியங்கா மோகன். தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். ‘ஓஜி’ படத்தில் பவன் கல்யாணின் மனைவியாக நடித்துள்ளார். இந்தப் படம் இன்று வெளியாகிறது.

இதற்கிடையே அவர், நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்துக்காக உருவாகும் வெப் தொடரில் நாயகியாக நடிக்க இருக்கிறார். இது அவர் நடிக்கும் முதல் வெப் தொடர். இதை, ‘நித்தம் ஒரு வானம்’ ரா.கார்த்திக் இயக்குகிறார்.

இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள். இயக்குநர் ரா. கார்த்திக், நாகார்ஜுனாவின் நூறாவது படத்தை இயக்க இருப்பதாக ஏற்கெனவே செய்திகள் வெளியாகி இருந்தன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in