’ஜனநாயகன்’ எப்படியிருக்கும்? – ஹெச்.வினோத் பதில்

’ஜனநாயகன்’ எப்படியிருக்கும்? – ஹெச்.வினோத் பதில்

Published on

‘ஜனநாயகன்’ படமாக எப்படியிருக்கும் என்று ஹெச்.வினோத் தெரிவித்துள்ளார்.

’ஜனநாயகன்’ தொடர்பாக எந்தவொரு தகவலையும் படக்குழு வெளியிடாமல் இருக்கிறது. இதுவரை சில போஸ்டர்கள் மற்றும் சிறிய டீஸரை மட்டுமே படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும், இப்படம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியான வண்ணமுள்ளன.

முதன் முறையாக இப்படம் குறித்து இயக்குநர் ஹெச்.வினோத், “’ஜனநாயகன்’ விஜய் சாருடைய பக்கா கடைசிப் படமாக இருக்கும். மாஸ், ஆக்ஷன், கமர்ஷியல் அனைத்தும் கலந்த படமாக இருக்கும். பக்கா ரசிகர்கள் கொண்டாடும் படமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார். இது விஜய் ரசிகர்களை பெரும் உற்சாகமாக்கி இருக்கிறது.

கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜனநாயகன்’. விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், கெளதம் மேனன், ப்ரியாமணி, நரேன், மமிதா பைஜு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தினை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in