விஜய் - ஜோதிகாவின் ‘குஷி’ செப்.25-ல் ரீரிலீஸ்!

விஜய் - ஜோதிகாவின் ‘குஷி’ செப்.25-ல் ரீரிலீஸ்!
Updated on
1 min read

விஜய் - ஜோதிகா நடித்த ‘குஷி’ திரைப்படம் செப்டம்பர் 25-ம் தேதி மறுவெளியீடு செய்யப்பட இருக்கிறது.

சமீபமாக பல்வேறு பழைய படங்கள் மறுவெளியீடு செய்யப்பட்டு வெற்றி அடைந்து வருகிறது. அந்த வரிசையில் செப்டம்பர் 25ம் தேதி, எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய் நடித்த ‘குஷி’ திரைப்படம் மறுவெளியீடு செய்யப்பட இருக்கிறது. இதனை ‘கில்லி’ படத்தினை வெளியிட்ட சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் வெளியிடவுள்ளது. இதற்கான பணிகள் மும்முரமாக தொடங்கப்பட்டுள்ளன.

2000-ம் ஆண்டு மே 19-ம் தேதி வெளியான படம் ‘குஷி’. ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் வெளியான இப்படத்தினை எஸ்.ஜே.சூர்யா இயக்கியிருந்தார். இதில் விஜய், ஜோதிகா, மும்தாஜ், விவேக், விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதற்கு இசையமைப்பாளராக தேவா பணிபுரிந்திருந்தார். இப்படத்தின் பாடல்கள் இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகிறது.

‘குஷி’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, இந்தி மற்றும் கன்னட மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in