நாயகனாக அறிமுகமாகும் பிக் பாஸ் விக்ரமன்

நாயகனாக அறிமுகமாகும் பிக் பாஸ் விக்ரமன்

Published on

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான விக்ரமன் நாயகனாக அறிமுகமாக இருக்கிறார்.

ப்ரீத்தி கரிகாலன் இயக்கத்தில் பிக் பாஸ் விக்ரமன் – சுப்ரிதா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. முழுக்க காதல் கலந்த காமெடி படமாக இப்படம் உருவாக இருக்கிறது. இன்னும் இப்படத்துக்கு பெயரிடப்படவில்லை. இதன் மூலமாக திரையுலகில் நாயகனாக அறிமுகமாகிறார் பிக் பாஸ் விக்ரமன்.

இப்படம் தொடர்பாக ப்ரீத்தி கரிகாலன், “எல்லோரும் தங்களுடன் பொருத்தி பார்த்துக் கொள்ளும்படியான தோற்றம் விக்ரமனிடம் உள்ளதாலேயே அவரை இந்தக் கதைக்கு தேர்வு செய்தேன். இந்தக் கதாபாத்திரத்தின் ஆழத்தையும், நேர்மையையும் விக்ரமன் நிச்சயம் திரையில் சரியாக பிரதிபலிப்பார். இன்றைய பார்வையாளர்களுக்கு ஏற்ற வகையில் கலர்ஃபுல்லான படமாக இருக்கும். எளிமையான அதே சமயம் தனித்துவமான கதையாக உருவாகிறது.” என்று தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 10-ம் தேதி முதல் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் படப்பிடிப்பு தொடங்குகிறது. ஒரே கட்டமாக இதன் படப்பிடிப்பை முடிக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in